மயிலாடுதுறை, ஆகஸ்ட் 3 –
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழன் ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவன தலைவர் சுதாகரன் தலைமையில் தேசிய அளவிலான ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் கராத்தே பிளாக் மற்றும் கலர் பெல்ட்களுக்கான போட்டியில் கட்டா, குமித்தே பிரிவுகளிலும், யோகாசன போட்டியில் புஜங்காசனம் சர்வாங்க ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் இரண்டு யோகா ஆசனங்களையும், சிலம்பாட்டத்தில் குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடி வரிசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 7வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டிகளில் மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழன் ஸ்போட்ஸ் அகடமி கராத்தே பயிற்றுநர் விநாயகம். ஆடிட்டர் குரு சம்பத்.காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் உட்பட இப்போட்டிகளில் கராத்தே, சிலம்பம், யோகா கலை வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.