கன்னியாகுமரி, அக். 9 –
குமரி மாவட்டம் மயிலாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று முதற்கட்ட முகாம் மயிலாடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தொடங்கியது. நாளை இரண்டாம் கட்ட முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் முதற்கட்டமாக நேற்று 8 ஆம் தேதி 1 வது வார்டு முதல் 8 வது வார்டு வரை உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். முதற்கட்ட முகாம் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாபு ரமேஷ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அம்புரோஸ், துணைத் தலைவர் சாய்ராம், கவுன்சிலர்கள் ஆர்.என்.பாபு, சுப்புலட்சுமி, அன்னசுமதி, செல்வகுமாரி, ரேவதி, சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோயில் மாநகர மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமிபாபு குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மயிலாடி பேரூர் திமுக செயலாளர் மயிலை டாக்டர் சுதாகர், மாவட்ட செயல் தலைவர் மயிலை மகாலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன்,
சிறுபான்மை அணி மயிலை வேதமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு 43 வகையான சேவைகளை வழங்குகின்றனர்.
இந்த முகாம் தொடர்பாக பேரூராட்சி பணியாளர்கள் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களின் இல்லம் தேடி நேரடியாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி இந்த முகம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். இரண்டாம் கட்ட முகாம் நாளை 9-ம் தேதி மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு முதல் 15 வது வார்டு வரை உள்ள பொதுமக்களும் இரண்டாம் கட்டமாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என மயிலாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் விஜயலட்சுமி பாபு, செயல் அலுவலர் அம்புரோஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



