கிருஷ்ணகிரி, ஜுன் 9 –
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ராசிபுரம் ரோட்டரி கிளப் மற்றும் வின்னர் சமூகக் குழு உள்ளிட்ட நண்பர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முயற்சியால், புதிய வகுப்பறையை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். போச்சம்பள்ளி SSS TECHNOLOGIES நிறுவனர் ஏ.ஞானசேகரன் ரூ.30,000 மதிப்பில் பள்ளிக்கு சிசிடிவி கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும் பள்ளியின் பெற்றோரான ஷெரிப் மற்றும் சபியுல்லா ஆகியோர் இணைந்து ரூ.70,000 மதிப்பில் மாணவர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் (ஆர்ஓ) வசதியை செய்து கொடுத்துள்ளார். நிகழ்ச்சியில் மத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் கு.செல்வராஜ் ரிப்பன் வெட்டித் துவக்கி வைத்து நன்கொடையாளர்களைப் பாராட்டினார். முன்னதாக தலைமை ஆசிரியர் கு.மௌனசுந்தரி வரவேற்பு ஆற்றினார். ஆசிரியர் சர்ஜான் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இறுதியாக ஆசிரியர் அருள் நன்றி கூறினார். ஆசிரியர்கள் ஷாஜகான், தயாநிதி, கலைமணி,சங்கீதா, கௌதமி, முனிராஜ், முஹம்மது, ஆலம், வினிதா மற்றும் அம்முகுட்டி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.