By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரையில் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு
அரசியல்தமிழ்நாடுமதுரை

மதுரையில் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு

Last updated: July 20, 2026 5:52 pm
July 20, 2026
22 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 20 –

மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்து நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோவில்கள் இடத்தை பதிவே செய்ய முடியாது. கோவில் நிலம், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலக ஆவணங்களில் பதிவு செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோன்று கோவில் நில பத்திரப்பதிவுக்கு முதல்நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். எனவே பழனி கோவில் நில பத்திரப்பதிவு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை. இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பதிவுத்துறையில் முறைகேடு என்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு அலுவலங்களில் யாரும் பத்திரப்பதிவு செய்யுங்கள் யாருக்கும் யாரும் சொன்னது கிடையாது. சில தவறுகள் நடந்தபோது அப்போது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடு குறித்து புகார் வந்திருந்தால் அப்போதே அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 589 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆளை போட்டதாக கூறுகின்றார்; பொறுப்புள்ள அமைச்சர் இது போன்ற பொதுவாக பேசக்கூடாது.

சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியை சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்து வருகிறார். முதலமைச்சர் போல நிழல் முதல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார். அனைத்து துறைக்கும் பதிலளிக்கிறார்.

அறநிலையத்துறை இடத்தை பதிவு செய்ய முடியாது. ஆனால் எப்படி பதிவு செய்தனர். குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள் என்றார்.

ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர். 60 பத்திரபதிவு ஆபிசில் ரைடு நடத்தி 37 லட்சம் கைப்பற்றினார்கள். நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சம் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில்? இதற்கு யார் பொறுப்பாவது என்றார்.

அமைச்சர் தனது இரு துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் பேசுகிறார் பிரச்சனையை திசை திருப்புகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத்துறையில் தவறு நடந்தால் மேலதிகாரிகளே உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்; எல்லா ஆட்சி காலத்திலும் ஒரே அதிகாரிகள் தான் பணியில் உள்ளனர். 589 பத்திரபதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும் என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை அமைச்சர் நிர்மல்குமார் கூற வேண்டும். நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்புகளை அமைச்சர் தீர்மானிக்க முடியாது, அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள்.

வணிகவரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார். அவர் இருக்கும் போது தான் வருவாய் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது. யார் கூடுதலாக Guideline மதிப்பு இருக்கிறதோ அதனடிப்படையில் தான் நில மதிப்பீடு பதிவு செய்யப்படும். பத்திரப்பதிவுத்துறையில் 2021 ல் 10 ஆயிரம் கோடி இருந்த 2026 மார்ச் 25 ஆயிரம் கோடியாக படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு வருவாய் உயர்ந்துள்ளது. வணிகவரித்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் 2021ல் 96 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2026 1 லட்சத்தி 43 ஆயி்ரம் கோடியாக வருவாய் வந்துள்ளது.

செய்தியாளர்களை மிஞ்சி எதுவும் இல்லை, அதனால் உங்களுடன் விளக்கம் அளிக்கிறேன். என் மகன் திருமணம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசுகிறார். அமைச்சர் நிர்மல்குமார் எப்படி கல்யாணம் பண்ணினாருனு தெரியவில்லை; அவருக்கு என் மீது என்ன பிரியம் என தெரியவில்லை. 48 ஆண்டுகள் திமுகவில் உள்ளேன். ஒரே கட்சியில் 48 வருடமாக பொறுப்பில் உள்ளேன்.

ஆனால் அமைச்சர் நிர்மல்குமார் அதிமுகவில் இருந்தார். பின்னர் மாறினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன சொன்னார் எப்படி பேசினார் என தெரியுமா? பழனி விவகாரத்தில் 100% டோக்கன் போட்டால் தான் பதிய முடியும் இரவு 9 மணிக்கெல்லாம் பதிவுசெய்ய முடியாது. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எந்தெந்த நிலங்களை பதியகூடாது என ஆவணங்கள் இருக்கும். ஆனால் எப்படி பதிவு செய்தார்கள் என தெரியவில்லை. பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் என்ன கூறினார்கள் என தெரிவித்தனர் என தெரியவில்லை. திமுக நிர்வாகி சாட்சி கையெழுத்து போட்டது என்பது நட்பு ரீதியாக அழைத்திருக்கலாம்.

அமைச்சர் நிர்மல்குமார் அவரது துறைகள் குறித்தும், மதுரையின் வளர்ச்சி குறித்தும் பேச வேண்டும். மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கியுள்ளனர். தேர்தலில் மக்கள் முடிவை ஏற்றுகொள்கிறோம், வெற்றியையும், தோல்வியையும் பார்த்துள்ளோம். இன்னும் 3 மாதத்தில் மின்சாரம் ஆங்காங்கே தட்டுப்பாடாக உள்ளது. மின்துறையில் தமிழகம் முழுவதுமே தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் எங்கும் மின்தடை இல்லை

திமுக ஆட்சியில் கைகள் கட்டப்பட்டது என கூறுகிறார்கள் யார் கட்டிவைத்தது என்றார். இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. அமைச்சர் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றார். அதனால் பதில் அளிக்கின்றேன்

யார், எதற்கு எங்கு பத்திரப்பதிவு அலுவலகங்களில் வாங்கினார்கள் என்பதை சொல்ல வேண்டும், பத்திரப்பதிவுத்துறை புகார் தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பதை வரவேற்கிறோம். புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுங்கள். நான் ஒரு சார்பதிவளாரிடம் கூட பேசியது இல்லை. ஆதாரமில்லாமல் பேசிவருகின்றார் அமைச்சர் நிர்மல்குமார்.

ரெய்டு நடத்துவதற்கான முயற்சி நடைபெறுகிறதா என்பது குறித்த கேள்விக்கு?

திமுகவிற்கு எதை பற்றியும் கவலை இல்லை, ரெய்டுனா என்ன என கேள்வி எழுப்பினார்.

நாங்கள் 5 ஆண்டுகளில் எந்த அதிகாரியை மிரட்டியுள்ளோம். மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு எம்.எல்.ஏ தவிர யார் யாரோ வருகிறார்கள். சொத்து கணக்கை கொடுங்க என அமைச்சர் கேட்கிறார்.

பணி உத்தரவு இல்லாமல் சாலைகள் அமைக்கப்பட்டதாக கிழக்கு தொகுதி எம்எல்ஏ கூறியது தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி: பணி உத்தரவு இல்லாமல் சாலைகள் அமைக்க முடியாது ; உண்மைக்கு புறம்பான தகவல் சொல்கிறார், வேண்டுமெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்

மதுரை மாநகராட்சியில் இப்போதே குப்பைக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதா? தீர்த்தக்காடு பகுதியில் திமுக ஆட்சியில் பட்டா வாங்கி கொடுத்தோம் யாரெல்லாம் குடியிருந்தார்களோ அவர்களுக்கு கொடுத்தோம். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மூலம் சாலை, மின் விளக்கு கொடுக்கப்பட்டது.

மதுரையின் வளர்ச்சி குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேச வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைக்கும் பதில் சொல்லுகிறார் ஜல்லிக்கட்டு என்றால் மூர்த்தி தான் என்கிறார், அதில் தவறு நடந்துருக்கிறது என்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை வரும் ஜனவரியில் சிறப்பாக நடத்த வாழ்த்துகள்

லண்டனில் இருந்து திமுக கூட்டம் நடத்துகிறார் ஸ்டாலின் என்ற கருத்துக்கு முதலமைச்சர் பதில் சொல்லுவார். அமைதியாக இருப்பது இன்னும் 3 மாதத்திற்கு தான். எதையுமே வெல்ல முடியாத தொகுதியை வெற்றிபெற வைத்துள்ளோம். மேலூர் தொகுதியை வெற்றிபெற வைத்தோம், மேலூர் வெற்றி குறித்து விரிவாக பேசுவேன்.

என்னை பற்றி தனிப்பட்ட முறையில் துறை ரீதியாக பேசுவதால் அமைச்சருக்கு பதில் அளித்துள்ளேன். தவெக அரசுக்கு 60 நாட்கள் ஆகிருக்கு இன்னும் 3 மாதங்கள் கால பொறுத்திருப்போம். சென்னையில் இருந்தாலும் எங்க இருந்தாலும். மூர்த்தி மூர்த்தி என்றே அமைச்சர் நிர்மல்குமார் சொல்லுகிறார் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்

August 21, 2025
45 Views
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
ஏஎம்சி மருத்துவமனை நடத்திய கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்
படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account