சென்னை, ஆகஸ்ட் 03 –
அடையார் பேட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா தொடக்க விழா செயிண்ட் பேட்ரிக் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு கல்லூரியின் வெள்ளி ஆண்டு கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தனது சிறப்புரையில் உயர் கல்வியில் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சிறுபான்மை நிறுவனங்கள் திராவிட மாடலின் கொள்கைக்கேற்ப இணைந்து செயலாற்றுகின்றனர். மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், திறன் இடைவெளிகளைக் குறைக்கவும் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் அருட்சகோதரர் டாக்டர் எஸ். அரோக்கியராஜ், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜே. இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், மேஜர் மனோஜ், தென் கொரியா குடியரசின் தூதர் சாங் நியுன் கிம், திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி,
சென்னைப் பல்கலை கழகப் பதிவாளர் பேராசிரியர் ரீட்டா ஜான், பேட்ரீசியன் கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலாளரான ரமேஷ் அமலநாதன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.