திங்கள்சந்தை, பிப். 27 –
இரணியலில் அமைந்துள்ள தக்கலை மதுவிலக்கு அமலாக்கா பிரிவு போலீசாருக்கு பேச்சிப்பாறை அருகே மணலோடை கிள்ளிக்கோணம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி (பொ), சப். இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட மதுவிலக்கு போலீசார் மணலோடை கிள்ளிக்கோணம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் கிள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த தங்கப்பன் மகன் சதீஷ் (43) என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள மலையில் சாராயம் காய்ச்சுவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப், மரப்பலகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



