தமிழகம், அக்.17.
முந்தைய அரசு கொண்டு வந்தது என்பதற்காக ஒரு திட்டத்தையோ, கட்டுமானத்தையோ நிறுத்தினால்தான் அது குற்றம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை காழ்ப்புணர்ச்சியின்றித் தொடர்ந்து செயல்படுத்தும் அரசாங்கத்தை யாரால் குறை சொல்ல முடியும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“பெரியார் அறிவுலகமும் மு.க.ஸ்டாலினின் பொறாமைப் புலம்பல்களும்” என்ற தலைப்பில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள இந்தப் பதிவு அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடர்வது தொடர்பாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.



