By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்

Last updated: February 9, 2026 3:30 pm
February 9, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 9 –

குமரி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கவும், அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இருந்தும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீதும், மது போதையில் வாகனம் ஓட்டுவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

எனவே நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் பேச்சுமுத்து தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.

இந்தப் பேருந்தில் மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 18-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி பகுதியில் வந்ததபோது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் பேருந்து ஓட்டுனர் மது போதையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

உதவி ஆய்வாளர் மது போதையில் இருந்த ஓட்டுநர் தொடர்ந்து சென்னையை நோக்கி பேருந்து ஓட்டுவது சரியில்லை, அது பயணிகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது என கூறி மாற்று ஓட்டுநர் வந்தால் மட்டுமே பயணிகளை தொடர்ந்து இந்த பேருந்தில் செல்ல அனுமதிப்பேன். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகள் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அதன் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகியோர் மது போதையில் உள்ளனரா என பரிசோதித்து அதன் பின்னரே பேருந்தை இயக்க அவர்கள் பணியாற்றும் நிறுவனம் அனுமதிக்க வேண்டும்.

ஆனால் தனியார் பேருந்து நிறுவனங்கள் இதனை முற்றிலுமாக கடைபிடிக்காததின் விளைவுதான் ஓட்டுநர்கள் மதுபோதையில் இருப்பதற்கு காரணம் என தெரிவித்த அவர் போதை ஓட்டுனருக்கு ரூபாய் 15,000 அபராதம் விதித்தும், அவரின் ஓட்டுநர் உரிமத்தை இடை நிறுத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து போதை ஓட்டுனருக்கு பதிலாக வேறு ஓட்டுனரை வரவழைத்து பேருந்தை கொண்டு செல்லுமாறு கூறினார். ஆனால் மது போதையில் இருந்த ஓட்டுநர் மாற்று ஓட்டுனரை வரவழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் பேருந்திலேயே அமர்ந்து இருந்தனர். மேலும் ஓட்டுநர் மது அருந்தி பேருந்தை ஓட்டி வந்தார் என அறிந்த பயணிகள் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேறு ஓட்டுனர் வந்தால் தான் பேருந்தில் ஏறுவோம் என தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வார விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்து ஓட்டுநர்கள் மது போதையில் வாகனம் ஓட்டுகின்றனரா என போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர்களை பிரீத் அனலைசர் மூலம் சோதனை செய்து மது போதையில் இருப்பதை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுத்து 18க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்களின் சிறப்பான பணி பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு பேருந்து நிலைய நுழைவாயிலில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தீவிர கண்காணிப்பு
மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்

July 15, 2024
406 Views
பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல்
+2 தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account