By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்

Last updated: June 23, 2026 7:36 pm
June 23, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், 45 வயது பெண்ணுக்கு சுமார் ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்த ஃபில்லோட்ஸ்- மார்பகக் கட்டியை மார்பகத் தோற்றம் மாறாமலே முழுமையாக அகற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் லாலா ராபின் (புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் டாக்டர் பெலிக்ஸ் கார்டீலியா (பிளாஸ்டிக், அழகு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்) இந்த புதியவகை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

சிறியதாக தோன்றிய மார்பகக் கட்டியை சுமார் ஐந்து வருடங்களாக எந்த வகையான பரிசோதனையோ, சிகிச்சையோ மேற்கொள்ளாமல், மார்பகத்தை அகற்றிவிடுவார்கள் என்ற பயத்துடனும், மனசஞ்சலத்துடனும் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகியதும் முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு ஃபில்லோட்ஸ் வகையான மார்பகக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கட்டியின் அளவு சுமார் 10 செமீ அளவு இருந்ததால், கட்டியை அகற்றும்போது ஏறத்தாழ பாதி மார்பகம் அகற்றும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு அழகு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையோடு சேர்ந்து ஆன்கோபிளாஸ்டிக் என்னும் புதிய முறையில் அறுவை சிகிச்சையை பிளாஸ்டிக், அழகு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் இணைந்து செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது கட்டி முழுமையாக அகற்றப்பட்டதா என்பதை கண்டறிய, ஃப்ரோசன் செக்ஷன் என்னும் திசு ஆய்வு முறையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யும்போது மார்பகக் கட்டியை அகற்றி, திசு ஆய்வில் அது முழுமையாக அகற்றப்பட்தை அறிந்ததும், மார்பகத்தின் தோற்றத்தை புனரமைப்பு செய்ய, ஆன்கோப்ளாஸ்டிக் முறையில், மார்பகத்தை வடிவமைத்து மறுபுறம் மார்பக அளவிற்கே மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்பும் எந்த சிக்கலும் இல்லாமல், வடிவமைத்த மார்பகத்தில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அந்த பெண் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிகிச்சை குழுவில் டாக்டர்கள் பாலாஜி, பினிட்டா ஷெரின் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செவிலியர் குழுவும் இணைந்திருந்தனர்.

மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை அகற்ற எப்போதும் முழு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை தற்போது இல்லை எனவும், கட்டிகளின் தன்மையை சரியான நேரத்தில் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சைகள் அளித்து முழுமையாக குணமடைய ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தற்போது சிறந்த முறையில் கிம்ஸ்ஹெல்த் நாகர்கோவில் செய்யப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் துறை சார்பாக மக்கள் குறை தீர்க்கும்
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு
புதுக்கடை அருகேமூதாட்டியை தாக்கிய பேரன்
காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்

April 27, 2026
24 Views
எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
புதுக்கடை அருகே நிறுத்திய வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்
காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் பாரத பிரதமர்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account