தருமபுரி, செப்டம்பர் 01 –
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் பார்வையிட்டார்.
உடன் தருமபுரி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மனோகரன், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளனர்.



