போகலூர், ஆக. 18-
புத்தேந்தல் கிராமத்தில் 39 ஆம் ஆண்டு கிருஷ்ணன் ஜெயந்தி விழா யாதவர் சங்கம் யாதவ இளைஞர் பேரவை மற்றும் அனைத்து மகளிர் மன்றங்களின் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், விளையாட்டுப் போட்டிகள், சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ கண்ணபிரானுக்கு சிறப்பு பூஜைகளும் வான வேடிக்கையிலும் நடைபெற்று சமுதாயக் கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் உறியடி உற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வழுக்கு மரம் ஏறும் போட்டியில் நீண்ட முயற்சிக்கு பிறகு அஸ்வின் அஜய் ஹரிஷ் செல்வம் ஆகியோர் இணைந்த குழு வழக்கு மரம் ஏறி பரிசு தொகையை பெற்றனர்.
மாலையில் உரியடி உற்சவ விழாவும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. நிறைவாக ஸ்ரீ கண்ணபிரான் வீதி உலா வந்து அருள் பாலித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.



