புதுக்கடை, ஜூலை 18 –
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த பகுதியில் காவல் உதவி ஜான்ரோஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தும் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த ஹனிபா (55) என்பவரின் கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ஐந்தரை கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறி முதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


