திருப்பூர், ஜூலை 24 –
புதிய திராவிட கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம். நிறுவனத் தலைவர் கே.எஸ். ராஜ் கவுண்டர் தலைமையிலும் மாநில அமைப்பு செயலாளர் இரா. இமானுவேல் நாடார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அனைத்து சமுதாய அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் 2000 மேற்பட்டோர் பங்கேற்றதால் புதிய திராவிட கழக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது, சுதந்திர போராட்ட தியாகிகளான தீரன் சின்னமலை மற்றும் பொல்லான் போன்றவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தது போல் தமிழக அரசு அவர்களுடன் சேர்ந்து போரிட்ட குணாளன் நாடார் மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்லின் ஓரி அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டியும் காங்கேயம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் திருவருவர் சிலையை நிறுவ வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.