தருமபுரி, ஜூலை 02 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உழவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது விவசாயக் கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது. அதனை காப்பாற்றும் நோக்கில் சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் முனியப்பன் இறங்கினார்.
பின்னர் அவரால் மீண்டும் மேலே ஏற முடியாமல் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, வலையின் மூலம் முனியப்பனையும் நாயையும் உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



