By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
கனஂனியாகுமரி

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Last updated: August 3, 2025 4:03 pm
August 3, 2025
20 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்களை ஏற்படுத்தி செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல ஏதுவாக பள்ளி கல்வி இயக்ககத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கென வட்டார அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களில் இருந்து உயர் தொழில் நுட்ப ஆய்வக வசதி உள்ள 236 வட்டாரங்களில் உயர் கல்வி வழிகாட்டு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இம்மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்திற்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கவும், கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியர்களின் மூலமாக அப்பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களும், வட்டார அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டு போட்டி தேர்வுகளுக்காக தங்களை தயார் படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஜெஇஇ, மருத்துவம் சார்ந்த படிப்புகள், வணிகவியல் மாணவர்களுக்காக கியூட் தேர்வு ஆகியவற்றிற்கு மாதிரி பள்ளிகளின் ஒருங்கிணைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து வட்டார முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார மைய பள்ளிகளில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் ஆகிய முதுகலை பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இப்ப பயிற்சிகள் தங்குத் தடை இன்றி நடைபெற ஏதுவாக சார்ந்த வட்டாரத்தில் உள்ள மையப்பள்ளி தலைமை ஆசிரியர், மைய பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதை உறுதி செய்திட தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பட்டதாரி வாலிபரிடம் ரூபாய் 6 லட்சம் மோசடி

July 17, 2024
56 Views
சென்னை மாநகராட்சி மேயரிடம் மனு
சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account