இராமநாதபுரம், ஜூலை 15 –
தமிழக முதலமைச்சர் (ஜூலை 14) காணொலி வாயிலாக இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுருபிரபாகரன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய கட்டிடத்தை பார்வையிட்டனர்.
தற்போது 210 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் பரமக்குடி அரசு மாவட்டதலைமை மருத்துவமனையில், தினசரி சுமார்800 வெளிநோயாளிகளும், 191 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ஆய்வக பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதிய ஐந்து மாடி மருத்துவமனை மரு கட்டிடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப்பிரிவுகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், ஸ்கேன் மற்றும் ஆய்வகவசதிகள்,தீவிரசிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவமனையின் மொத்த படுக்கை வசதி 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் செயர் பொறியாளர் குருதிவேல், தவெக மாவட்ட செயலாளர் மதன்பரமக்குடி நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



