கிருஷ்ணகிரி, ஜுலை 15 –
பெருந்தலைவர் கல்வி கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் விஜய் இன்ஸ்டியூட் சார்பில் இன்று காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் இன்ஸ்டியூட் நிறுவனத் தலைவர் துரை என்கின்ற துரைசாமி தலைமை தாங்கினார். மேலும் ஆசிரியர்கள் பிரியதர்ஷினி, ரேமா உள்ளிட்ட விஜய் இன்ஸ்டியூட் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக விஜய் இன்ஸ்டிடியூட் செயலாளர் தமிழ்ச்செல்வன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



