மார்த்தாண்டம், ஏப். 27 –
தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுபித் அந்தோணி (24). சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கடற்கரையில் காற்று வாங்குவதற்காக இரவிபுத்தன் துறையில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தூத்தூர் நூலகம் அருகில் வசிக்கும் ராகுல் (24) மற்றும் அதே பகுதியில் உள்ள ஜேக்சன் (24) ஆகியோர் சேர்ந்து சுபித் அந்தோனியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழுத்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் ராகுல் மற்றும் ஜேக்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


