By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது

Last updated: February 10, 2026 6:36 pm
February 10, 2026
46 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 10 –

கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னணி மூன்றாம் நிலை சிகிச்சை மருத்துவமனையாக விளங்கும் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் வரும் பிப்ரவரி 22, அன்று கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 – சீசன் 2 நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நாகர்கோயில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிம்ஸ் ஹெல்த் குழுமம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், டாக்டர் எம். ஐ. சஹதுல்லா, “கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 – சீசன் 2 இன் மைய கருத்து உறுப்பு தானத்தின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவை அதிகரித்து வரும் நிலையில், தானம் செய்பவர்கள் குறைவாக இருப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த மாரத்தான் மூலம், ஒருவரின் உறுப்பு தானம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதையும், உறுப்பு தான கலாச்சாரத்தை சமூகத்தில் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

மேலும், இந்த மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய விளையாட்டு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்றும், சமூக பொறுப்புணர்வையும் மக்களின் பெரும் பங்கேற்பையும் வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரேஸ் டைரக்டர் மற்றும் ஆலோசகர் – குடல்வயிறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெஜீஷ் செல்வகணேசன் கூறுகையில்: இந்த மாரத்தான் ஒரு போட்டி மட்டுமல்ல, உயிர்களை காப்பாற்றும் ஒரு இயக்கம் என்றும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி என்றும் குறிப்பிட்டார்.

“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாரத்தான் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்திலிருந்து தொடங்கி, நான்கு வழிச்சாலை பைபாஸ் வழியாக சென்று, மீண்டும் மருத்துவமனை வளாகத்திலேயே நிறைவடையும்.

இந்த ஆண்டுக்கான மாரத்தானுக்கு 1,100-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால், அதிகாரப்பூர்வ முடிவு தேதிக்கு முன்பே பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 300 பெண்கள் பங்கேற்பது, பெண்களின் விளையாட்டு பங்கேற்பை ஊக்குவிக்கும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

மாரத்தான் பிரிவுகள்:

5 கி.மீ.-பொழுதுபோக்கு ஓட்டம் (Fun Run)

10 கி. மீ. ஓட்டம்

அரை மாரத்தான் – 21 கி.மீ.

இந்த மாரத்தான் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க, பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு, தொழில்முறை ஓட்ட மேலாண்மை மற்றும் முழுமையான மருத்துவ உதவிகளுடன் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் தாணு – மருத்துவ கண்காணிப்பாளர், கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில், திரு. கிரிபேஷ் ஹரிஹரன் – CHRO & CEO (SBUs) மற்றும் தலைமைத் செயல்திட்ட அதிகாரி கிம்ஸ் ஹெல்த் குழுமம், திரு. கிரண் – குழும மனிதவளத் தலைவர், Quality Care India Ltd., டாக்டர் தீபக்-பிராந்திய மருத்துவ இயக்குனர், கிம்ஸ் ஹெல்த் குழுமம், திரு. நவீன்- செயல்திட்ட அதிகாரி, QCI மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம்
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேசிய அளவிலான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
இடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள்
பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்
குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஓவியங்கள் வரையும் “மாமதுரை விழா”

July 13, 2024
194 Views
கோவையில் 58 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளில்
பர்கூரில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டி கண்காணிப்பு கேமரா மற்றும் சோதனை சாவடி திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account