மும்பை, செப். 29 –
இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் ஃபைனல் ரேசிங் ப்ரோமோஷன்ஸ் நிறுவனம் மகாராஷ்டிராவின் முதல் ஃபார்முலா நைட் ஸ்ட்ரீட் பந்தயத்தை நவி மும்பையில் நடத்துகிறது. இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் ஃபைனல் ரேசிங் ப்ரோமோஷன்ஸ் மகாராஷ்டிராவின் முதல் ஃபார்முலா நைட் ஸ்ட்ரீட் பந்தயத்தை நவி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடக்கி வைக்கிறார்.
இப்பந்தத்திற்கான ஆர் பி.பி.எல் மற்றும் நவிமும்பை மெட்ரோ கார்பரேஷன் இடையே புரிந்துணர்வு இதற்கான ஒப்பந்தம் முதல்வர் பட்னாவிஸ் முன்னிலையில் கையெழுத்தானது. ஆர் பி.பி.எல் நவி மும்பை மெட்ரோ கார்பரேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் பட்னாவிஸ் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த சுற்று பாம் பீச் சாலையில் தொடங்கி நெருல் ஏரி வரை வந்து முடிவடையும்.
இந்த பந்தய விழாவின் இறுதிப் போட்டி டிசம்பர் 2025 இல் நடைபெற உள்ளது; இந்நிகழ்வு உலகளாவிய விளையாட்டு நாட்காட்டியில் நவி மும்பையை பொறிக்கச் செய்யும் ஒரு மைல்கல்லாகும். ஏறக்குறைய 3.753 கி.மீ மற்றும் 14 வளைவுகளை மற்றும் திருப்பங்களைக் கொண்ட இந்த எஃப்.ஐ.ஏ-கிரேடு ஸ்ட்ரீட் சர்க்யூட், ஓட்டுநர்களின் துல்லியம், உத்தி மற்றும் திறமையை சவால் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மஹாரஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியதாவது: இந்திய பந்தய விழாவை நவி மும்பைக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” “மும்பை தெருப் பந்தயம் மகாராஷ்டிராவின் மோட்டார்ஸ் போர்ட் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது, இது சுற்றுலாவை ஊக்குவிக்கும். இந்த நிகழ்வு இளம் பந்தய வீரர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை போன்ற துறைகளில் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் என்றார்.



