திருவெண்ணெய்நல்லூர், ஆக. 04 –
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கான நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆர்மி. தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜமுனா சபரிநாதன் முன்னிலை வகித்தார். மாநில வணிகர் சங்க பாசறை சுபாஷ் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில மாணவர் பாசறை கார்த்திக் ரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் கிளை வாரியாக வாக்கு சாவடி முகவர்களின் பணிகள் குறித்தும், நிர்வாகிகள் மாத சந்தா வழங்குதல் குறித்தும் ஆலோசனைகளை வணங்கினார். மேலும் புதிய கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். இறுதியாக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பாசறை செயலாளர் பாஷா நன்றி கூறினார்.