திருவள்ளூர், ஆக. 5 –
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களால், கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள்/பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவுரையின்படி திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் ஆகஸ்டு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 07.08.2026 அன்று கூட்டுறவு சார்பதிவாளர்கள்/கள அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி)கள் முன்னிலையில் பின்வரும் விவரப்படி கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.
- கும்மிடிபூண்டி வட்டாரத்தில் உள்ள கும்மிடிபூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) கும்மிடிபூண்டி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்
- மீஞ்சூர் வட்டாரத்தில் உள்ள பொன்னேரி தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், மீஞ்சூர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்
- சோழவரம் வட்டாரத்தில் உள்ள சோழவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், சோழவரம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- புழல் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களுக்கு சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) சோழவரம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- எல்லாபுரம் வட்டாரத்தில் உள்ள ஊத்துக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், எல்லாபுரம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், பூந்தமல்லி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- கடம்பத்தூர் வட்டாரத்தில் உள்ள கடம்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், கடம்பத்தூர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- பூண்டி வட்டாரத்தில் உள்ள ஒதப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், பூண்டி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- திருவள்ளூர் வட்டாரத்தில் உள்ள ஈக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், திருவள்ளூர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- திருவாலங்காடு வட்டாரத்தில் உள்ள கனகம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) பள்ளிப்பட்டு அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- திருத்தணி வட்டாரத்தில் உள்ள திருத்தணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்), துணைப்பதிவாளர் அலுவலகம், திருத்தணி சரகம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) திருவாலங்காடு அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
- பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர் பள்ளிப்பட்டு அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார். மேற்குறிப்பிட்டுள்ள சங்கங்களில் 07.08.2026 அன்று பிற்பகல் 1.00 மணி வரை கூட்டுறவுத்துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக, கூட்டுறவு சார்பதிவாளர்களிடம் அளித்து தீர்வு காணலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்


