திருப்பூர், ஜூலை 20 –
செட்டிபாளையத்தை சேர்ந்த சாந்தாமணி கொடுத்த மனு: எனது மாமனார் நாராயணசாமிக்கு பாத்தியப்பட்ட கோவை வடக்கு வட்டம், சின்னவேடம்பட்டி கிராமம் 7.35 செண்ட் உள்ளது. நாராயணசாமி கடந்த 04.02.1974-ம் தேதி அவர் காலமாகிவிட்டார். K.நாராயணசாமி நாயுடு வாரிசுப்படி வாரிசுதாராகள் N.ரங்கநாதன் (1), N.ரேணுகாதேவி (எ) ரேணுகா (2). N.கோவிந்தராஜுவ (3. N.தாமோதரன் (4) ஆரிய நால்லி ஆவோம்.
மேற்படி எனது கணவன் N.கோவிந்தராஜலு 31.07.1998- அன்று காலமாகிவிட்டார். அதன் பின் என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்த எனது மகன் ராஜ்குமார் என்பவர் எனக்கு தெரியாமல் நான் உயிருடன் இருக்கும் பொழுதே நான் 25.01.1999-ம் தேதி அன்று இறந்துவிட்டதாக பொய்யான தகவல் சொல்லி எனது இறப்பு சான்றினை திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், 15 வேளையும் டவுன் பஞ்சாயத்தில் இறப்பு சான்று எண்.S.L.No.0324 என கொண்ட போலியான இறப்பு சான்றிதளை திருப்பூரில் பெற்று உள்ளார்.
மேற்படி சொத்தை எனது மகன் ராஜ்குமார் எனக்கு தெரியாமல் எனது கணவரின் குடும்பத்தாரிடம் பொய்யான தகவல் கூறி மேற்படி சொத்தை 11.10.2004-ம் தேதி அன்று எனது கணவரின் குடும்பத்தாரும். எனது மகனும் பாக சாசனம் பிரித்துள்ளனர்.
மேலும் எனது கணவரின் பங்கு இடத்தை எனது மகன் பொய்யான என்னுடைய இறப்பு சான்றிதழ்கள் காட்டி கணவரின் பங்கு இடத்தை விற்று வருகிறான். மஎனது சொத்துக்களில் ஓர் பகுதி எனது மகள் ராஜ்குமார் மனைவி சத்யா என்ற பெயருக்கு மாற்றி உள்ளான். நான் உயிருடன் இருக்கும் பொழுது எனது பெயரில் பொய்யான இறப்பு சான்றிதழ் பெற்ற எனது மகன் ராஜ்குமார் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பெயரில் உள்ள இறப்பு சான்றை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



