திருவண்ணாமலை, ஜூலை 08 –
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் 2668 அடி உயரம் கொண்ட மலை உள்ளது. இந்த மலையை சிவனாக நினைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் அளவு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மலையை சுற்றி 500க்கும் மேற்பட்டோர் தங்களது இல்லற வாழ்வை துறந்து சிவனே கதி என்று துறவறம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் காசிவிஸ்வநாதன் என்ற சாது உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். எமலிங்கம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்ற சமூக ஆர்வலர், தொழு நோயாளிகள், ஆதரவற்ற முதியோர்கள், சாதுக்கள் போன்றோர் இறந்தால் அவர்களது உடலை காவல் துறையினரின் அனுமதி பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார். இதுவரையில் தமிழகம் முழுவதும் அவர் 3,329 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
என்று கூறப்படுகிறது. நல்லடக்கம் செய்யப்பட்ட போது சாதுக்களும் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



