நாகர்கோவில், ஜூலை 03 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த எள்ளு விளை பகுதியில் நேற்று நவீன முறையில் மரங்களை பாளீஸ் செய்து கட்டில், பீரோ, டிரெஸ்ஸிங் டேபிள், நாற்காலிகள், தரத்துடனும் கண்ணை கவரும் விதத்தில் வடிவமைத்து கொடுக்கும் திருமலை உட் ஒர்க்கர்ஸ் நிலையத்தினை மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் ( முன்னாள் காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் ) ஜாண் சொளந்தர் மற்றும் உட் ஒர்க்ஸ் உரிமையாளரின் தாயார் அன்னலெட்சுமி உடன் இணைந்து ரிப்பன் வெட்டி தொழிற்கூடத்தை திறந்து வைத்தனர். உடன் சிவதாணுலிங்கம், சிவபிரபு, முன்னாள் கூட்டுறவு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், தொழில் அதிபர் செந்தில் குமார், காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி முன்னாள் மாவட்ட துணை தலைவர் தங்கராஜ் மணி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.