ஈரோடு, செப். 23 –
செங்குந்தர் மகாஜன சங்கம் மாநில துணை தலைவரும் ஈரோடு மாவட்ட தலைவருமான டாக்டர் நந்த கோபால் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்த குமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பிறந்த நாள் (அக்டோபர் 4) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சுதந்திர போராட்ட தியாகத்தையும் போற்றும் வகையில் அவருடைய பிறந்த தினத்தை ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வைரம் முருகானந்தபதி, சீனிவாசன் மாவட்ட துணைத் தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், இளைஞரணி ராகுல் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



