மதுரை, ஜூலை 9 –
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணி மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்,
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.