திருச்சி, மார்ச் 30 –
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்துக்கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் விஜயின் தவெகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதன்படி தவெக கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டயிடுகிறார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதி என்று தெரிந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.



