கன்னியாகுமரி, அக் :10
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கச் செல்லும் பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி, குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகியோரின் விக்கிரகங்களுக்கு களியக்காவிளையில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தமிழக–கேரள எல்லையில் கேரள போலீசார் பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கேரள மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



