திண்டுக்கல், ஜூன் 19 –
தேசிய சப் – ஜூனியர் ஹாக்கி போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அணிக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் GTN கலைக்கல்லூரியில் துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஹாக்கி சங்க துணைத்தலைவர்கள் R.ரமேஷ்பட்டேல், G.சுவாமிநாதன், கல்லூரி முதல்வர் சரவணன், கல்லூரி டீன் M.பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ராமானுஜம் வரவேற்றார். மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B.காஜாமைதீன் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பயிற்சி முகாம் 20 நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அணி பயிற்சியாளர் குணசேகரன், GTN கலைக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், ஹாக்கி சங்க பொருளாளர் விக்டர்ராஜ், துணைச் செயலாளர் மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.