By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரியில் தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு
தருமபுரி

தருமபுரியில் தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு

Last updated: October 10, 2025 6:57 pm
October 10, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 10 –

தருமபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: சோழந்தாபுரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை சம்பவம், தற்போது மதுரை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் 14 வயது சிறுவன் செய்ததாக சொல்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் மோடி, வங்கி கணக்கில் இருக்கும் பணம் பிரிக்கப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கிறேன். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் மாபெரும் மோசடி நடந்து வருகிறது. மக்களின் பணத்தை மோசடி செய்யவும், சுரண்டவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய்க்கு, பாஜக துணை ராணுவ பாதுகாப்பை வழங்கியுள்ளது. அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சொல்லி தங்கள் பக்கம் இழுக்க நினைக்கிறது. தமிழ்நாட்டில் மக்களுக்கு விஜயை பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பு இருக்கிறது. இதுதான் கரூர் சம்பவம்.

இந்தியாவில் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மக்கள் சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல வந்தால் உயிரிக்கு ஆபத்து ஏற்படும் என சொல்வது மக்களை அவமதிக்கிறது. விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்துவது. மக்களை அடித்து கொன்றதாக சொல்வதற்கு சான்றுகளா இல்லை. அரசியல் காரணங்களுக்காக இப்படி பேசுவது இழிச்செயல். இந்த இழிச்செயலை யாரும் செய்யமாட்டார்கள். விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பதை தேர்தலில் தான் பார்க்கமுடியும்.

அதிமுக தவெக கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்த பாஜக முயல்கிறது. இதற்கு விஜய் இடம் கொடீப்பாரா? அல்லது கொள்கை எதிரியாக பாஜகவை நினைப்பாரா? அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்ள, தனது கட்சிக்காரர்கள் மீது வழக்கு விழாதளவில் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? பாசிசம் என்று பேசியது போல் இருப்பாரா? இதையெல்லாம் தெரியாத அளவில் விஜய் இருக்கிறார் என்று பார்ப்போம். தன் மீது வழக்கு போட்டாலும் சட்டத்தின் உதவியுடன் எதிர் கொள்வாரா? இல்ல பாஜகவுடன் தன்னை அடகு வைப்பாரா என்றுதான் பார்க்க வேண்டும். ராகுல் காந்தி விஜயை தொடர்புகொண்டு பேசியுள்ளார். பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்டோர் சந்திப்பது பாஜக எம்பி கூட்டம் வந்து பார்க்கிறது.

தமிழகத்தில் பேரிடருக்கு வரவில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் மக்களை சந்திக்கிறார்கள். முதலமைச்சர் தினமும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மக்களை சந்திக்கிறார். சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஓராண்டுக்கு முன்பே அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான்.

எங்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதை காவல் துறையும் கண்காணித்து முதல்வருக்கு அறிக்கை கொடுக்கிறார்கள். நாங்கள் கூடுதல் இடம் கேட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். எம்ஜிஆர், அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்களின் சிலை அவமதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதற்கு வழக்கு பதிவு செய்து பிணையில் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் பிணை கேட்டு வரக்கூடாது. போரூர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்கள். அந்த கொடூரர்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் முன்வரக்கூடாது. சமூக நீதி அரசு என சொல்லும் முதலமைச்சர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் கணக்கெடுப்பு நடத்தி முன்மாதியாக விளங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்றவாறு அனைத்து சமுகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

திருச்சி விமான நிலையம் அடித்து நொறுக்கும் விஜய் ரசிகர்களை படமெடுக்கும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். முன்னனி செய்தி சேனல் செய்தியாளர் தொகுத்து வழங்கும் போது, தொந்தரவு செய்கிறார்கள். மருத்துவர் ராமதாஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஐசியுவில் இருப்பதாக, அவரது மகன் அன்புமணி சொன்னார். அவர் நலமோடு, வளமோடும் இருக்க வேண்டும் என இயற்கையை வேண்டுகிறேன். அவருடன் இருக்கும் என்னோடு பேசுபவர்களிடம் சொல்லிவிட்டேன். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு பிறகு நானும் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. எந்த தலைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்வதில்லை. இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கி அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும். ஆனால் திரைபட வெளிச்சத்தை வைத்து அரசியனையில் அமரவேண்டும் என்று நினைக்கிறார்.

10 ஆண்டுகள், 5 ஆண்டுகள் மக்கள் பிரச்சினைக்காக பேச வேண்டும். செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என சொல்லயிருக்கிறேன். ஆனால் சினிமாவை வைத்து வெற்றி பெறுவேன். ஆட்சி அமைப்போம் என எண்ணுகிறார்கள். நடிகர்களுக்காக அலகு குத்துவது போன்ற அறியாமையால் இந்த தமிழ் சமூகம் எதுவும் செய்யாமல் விஜய் மக்களுக்கான என்ன போராட்டம் செய்தார். மக்கள் பிரச்சினைக்காக போராட வந்தால், நாங்கள் கைக்கோர்த்து போராட தயாராக இருக்கிறோம். அதனால் தான் இந்த கூட்டணியில் நான் இடம் பெற மாட்டேன். கரூர் சம்பவ காரணத்திற்கு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். எல்லாருமே இதை தான் சொல்கிறார்கள்.

விஜய்க்கு பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றமே வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என கேட்டுள்ளது. ஏன் விஜய் அவர்களுடன் திமுக இருக்குமோ என்று திருமாவளவன் சொன்ன கருத்துதான் எனக்கும் உண்டு. விசிக தலைவர் திருமாவளவன் கார், பைக் மீது மோதவில்லை. ஆனால் பைக்கில் வந்தவர், பேசியதால் உடன் வந்த தொண்டர்கள் அடித்தார்கள். திருமா பாதீகாப்பு பிரிவில் இருப்பதால், அவர் வேள்வியில் வரவில்லை. பாதுகாப்பில் இருந்த காவலர்கள் பைக்கில் வந்தவரை காப்பாற்றி அழைத்து சென்றனர். தொண்டர்கள் தாக்கியது தவறு. விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எம்பி, தலித் மக்களின் தலைவர் அவருக்கு பாதுகாப்பு கேட்பது தவறில்லை. ஒருநபர் ஆணையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில் சிலர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு தமிழக அரசு அமைதியாக இருப்பது ஏற்புடையதில்லை இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
சிக்கார்த்தன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
காவல் படை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

160 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்

April 19, 2025
30 Views
ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா
கிருஷ்ணகிரியில் “உயர்வுக்கு படி” வழிகாட்டி நிகழ்ச்சி
கேரள அரசு பஸ் மீது கல்வீச்சு
இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account