தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த உம்மிய பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகிறது. மார்கழி மாத அம்மாவாசையை முன்னிட்டு கந்தசாமி, சக்திவேல், சிவக்குமார் குடும்பத்தினர் பெரியாண்டிச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டனர். பூஜையின் போது தமிழரசன் அருள் வாக்கு கூறினார். இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பெரியாண்டிச்சி அம்மனை வழிபட்டனர்.



