தருமபுரி, ஆகஸ்ட் 25 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அண்ணா அறிவகம் அலுவலக திறப்பு விழா மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் M.P. கௌதம் வரவேற்றார். கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் உதயசூரியன், ராஜேஷ், ஈஸ்வர், யாஸ்மின், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ரகு, கவின், ராகுல், காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், அம்பிகா, மோகன், நரேஷ், தேன்மொழி, பிரவீன், சிதம்பரம், கோமதி, பிரபு, ராதிகா, கிருஷ்ணசாமி, பரமேஸ்வரன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, தருமபுரி தொகுதி பொறுப்பாளர் டி. செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் M.P. பாரி, மாநில நிர்வாகிகள் தாமரைச்செல்வன் Ex MP, செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, உமாசங்கர், ஆறுமுகம், பொதுகுழு உறுப்பினர்கள் நடராஜ், சோலைமணி, சரஸ்வதி துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, பெரியண்ணன், செல்வராஜ், முருகேசன், கருணாநிதி, வீரமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, பேரூர் கழக செயலாளர்கள் வீரமணி, சண்முகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



