கன்னியாகுமரி மே 5
பா.ஜ.க சிறுபான்மையினர் அணி மாநில பொதுச்செயலாளர் சதீஸ்ராஜா வெளிட்ட செய்தி குறிப்பு;
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர், ஏற்கனவே மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்து எச்சரிக்கையுடன் இருந்தோம்.ஆனால். தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதற்காக அவர்கள் வீட்டைச் சுற்றி சுற்றி வருவதாகவும் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததின் விளைவு உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்டக்கப்பட்டுள்ளார். எனவே உடனடியாக காவல் துறையினர் ஜெயக்குமார் மரணத்திற்கு முன்பு சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என அவர் கைப்பட எழுதிக் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்த நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



