தேனி, மே 11 –
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தனி பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தமிழகத்தின் 14 வது முதலமைச்சர் ஆக பதவி ஏற்றதை தொடர்ந்தும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக சபரி ஐங்கரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததை கொண்டாடும் விதமாக பெரியகுளம் பகுதி தொழிலதிபரும் செல்வா டிம்பர்ஸ் ஷாமில் உரிமையாளருமான ஆரோக்கியதாஸ் ஏற்பாட்டில் பெரியகுளம் நகர இளைஞரணி பிரபாகரன் மற்றும் ஆசிப் மது ஆகியோர் சார்பாக பெரியகுளம் புதிய பேருந்து நிலைய பிரிவு அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் பெரியகுளம் நகர் கழக நிர்வாகிகள் தினேஷ், முகமது வாஜித், இம்ரான், சௌந்தர பாண்டியன், மதன், வழக்கறிஞர் சக்திவேல், பிரபு, பாலசுப்ரமணி, பால்பாண்டி, நாக பாண்டி, கோபாலகிருஷ்ணன் ராகவன் கோபி, அருண், அஜித் குமார் உட்பட பெரியகுளம் நகர கழக நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்கள், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



