திருப்பூர், ஜூலை 9 –
ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தலைமையில் அலுவலக்கூட்டரங்கில் தனியார் பேருந்து கட்டணம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூழிக்கப்படுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பதாக புகார் வராபெற்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை அனுமதிக்க வேண்டாம், பேருந்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்மனிஷ் நாரணவரே அறிவுறுத்தித்தினார்கள்.
இக்கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தனியாளர் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் துறை சார்ந்த கலந்து கொண்டார்கள்.



