By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா

Last updated: September 1, 2025 5:56 pm
September 1, 2025
51 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப். 1 –

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டி மாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். நிகழாண்டு விழா சனிக்கிழமை (ஆக. 30) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக பூண்டிமாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இறை பாடல்களுடன் சுமந்து வந்தனர். மாதாவின் படம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பக்தர்கள் முன் செல்ல, பேண்டு வாத்தியங்கள் முழங்க, பங்கு தந்தையர்கள் ஊர்வலமாக வந்து பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தனர். கும்பகோணம் மறைமாவட்ட மேதகு மேனாள் ஆயர் எப். அந்தோனிசாமி கொடியை புனிதப்படுத்தி கொடி மரத்தில் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அவருடன் சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பன் அருள் செல்வன் உடன் இருந்தார். கூடியிருந்த மக்கள் “மாதாவே வாழ்க, பூண்டி அன்னையே வாழ்க” என்று கோஷமிட்டனர். வானவேடிக்கை, அதிர்வேட்டுகள் முழங்கின. பின்னர் திருப்பலி பூசை நடத்தி மறையுரை ஆற்றி அருளாசி வழங்கினார். இதில் மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ். இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ. சாம்சன், துணை அதிபர் ஜெ. ரூபன் அந்தோனிராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் ஆல்பர்ட் சேவியர், உதவித்தந்தைகள் எஸ். அருள் லாரன்ஸ், எம். செல்வகுமார், ஆன்மீகத்தந்தை பி. ஜோசப், சுற்றுவட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்தனர். 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு பங்கு தந்தையர்கள் நடத்தி வைக்கின்றனர். செப். 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அன்னையின் பிறப்புப் பெருவிழா திருப்பலி நிறைவேற்றி அருளாசி வழங்குகிறார்.

அன்று இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பூண்டி மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர் பவனியை புனிதப்படுத்தி துவக்கி வைக்கிறார். 9ம் தேதி குருமார்கள் திருவிழா கூட்டு திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் நிறைவேற்றுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டிமாதா பேராலய அதிபரும், துணை அதிபரும் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டி
சமகாலத்து சமூகத்தில் விருப்பங்கள் , தேவைகள்
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்!
தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமி தோப்பில் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

August 16, 2025
24 Views
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account