சேலம், ஜூலை 21 –
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, சங்ககிரி, நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூபாய் 11.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 17 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அந்த வகையில் ரூ 41.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெய்க்காரப்பட்டி புதிய துணை சுகாதார நிலையம். ரூ 5.36 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், ஆவடத்தூர் ஊராட்சி கட்டின நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ 69.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ரூ.17.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கணினி வகுப்பறை கட்டிடம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ 69.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ரூ 7.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறையுடன் கூடிய சமையல் அறை கட்டிடம், காப்பரத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ 69.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறை கட்டிடங்கள், ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 8.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடம், ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 8.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடம், கூனாண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 34.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், மல்லிகுந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ 34.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், மானத்தாள் ஊராட்சி ஓலை பட்டியல் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ 34.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், ரூ16.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தேக்கம்பட்டி அங்கன்வாடி மையம், மூங்கில் பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ 34.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ 10.27 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
பொதுப்பணி துறை சார்பில் மேட்டூர் வட்டம் நங்கவள்ளி பேரூராட்சி பெரிய வனவாசி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ 34.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை ஆய்வுக்கூடங்கள். நங்கவள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ 51.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.10. 27 கோடி மற்றும் பொதுப்பணி துறையின் சார்பில் ரூ 86.50 லட்சம் என மொத்தம் ரூ 11.14 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் இத்தகைய வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.



