தென்தாமரைகுளம், ஜூலை 16 –
சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயாவில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வும் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள், ஓவியம் திட்டும் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை தேவி வரவேற்று பேசினார். நிர்வாக அதிகாரி அஜித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ஆர். தர்மரஜினி கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். முடிவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி அம்பிகா வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் தங்க நித்தியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.