சுசீந்திரம், ஏப். 18 –
சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் வருடம் தோறும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழா வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை மரபுப்படி கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியார் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேளதாளங்கள் முழங்க ரத வீதியை சுற்றி கோவில் நிர்வாகத்திடம் கொடுத்தனர். இன்று காலை 6 மணிக்கு திருமுறை பாராயணமும் பதினோரு மணி அளவில் கொடிமர பூஜைகள் வட்ட பள்ளி மடம் டாக்டர் சர்மா செய்திருந்தார். தெற்குமண்திலிப் நம்பூதிரி திருகொடி ஏற்றினார். பின்பு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இரண்டாம் திருவிழா அன்று காலை நாலு மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர்திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு புஷ்பக வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மூன்றாம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு புஷ்பக வாகனத்தில் சுவாமி அம்பாள் திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு கற்பக விருட்சக வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நான்காம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு சுவாமி அம்பாள் பறங்கி நாற்காலி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐந்தாம் திருவிழா அன்று காலை 5:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை 10:30 மணிக்கு அஷ்டாபிஷேகமும் மாலை ஐந்து முப்பது மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து உற்சவமூர்த்திக்கு அஸ்டாபிஷேகமும் இரவு 9:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆறாம் திருவிழா அன்று காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் வைத்து சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மண்டக படிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏழாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை ஐந்து முப்பது மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் இரவு ஒன்பது முப்பது மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவிதி உலா வரும் நிகழ்ச்சியின் நடைபெறுகிறது.
எட்டாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சிதம்பரேஷ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் நடராஜர் மூர்த்திக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும் மாலை ஐந்து முப்பது மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து சிதம்பரேஷ்வரருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும் இரவு 7:30 மணிக்கு சிதம்பரேஷ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 10:30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒன்பதாம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு அம்பாளும் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும் சப்பரதேரில் சுவாமியும் அம்மன் தேரில் அம்மனையும் அமர வைத்து திருக்கோவிலை சுற்றிஒருமுறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு சப்தாவர்ன காட்சியும் நடைபெறுகிறது.
பத்தாம் திருவிழா அன்று இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து மூன்று முறை தெப்பக்குளத்தை வளம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன், தாணு மாலைய சுவாமி கோவில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



