இந்திய அஞ்சல் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட செப்டம்பர் 17 முதல் அக்டோபர் இரண்டு வரை தூய்மையே சேவை 2024 துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நேற்று 2/10/2024 புத்தேரி கிராமத்தில் உள்ள கிராம சபை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் க செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருட்கள் வழங்கியும் கௌரவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் புத்தேரி பஞ்சாயத்து தலைவர் கண்ணன் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை மக்கள் தொடர்பு அதிகாரி சிவகுமார் மற்றும் வணிக வளர்ச்சி அதிகாரி ராம்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்



