சிவகங்கை, ஜூலை 08 –
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைக்கிணங்கவும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டலின்படியும் சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர் திமுக 15-வது வட்டக்கழக செயலாளரும் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவருமான தனசேகரன் ஏற்பாட்டில் சிவகங்கை நகர் உழவர்சந்தை பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியும் கழக நான்காண்டு சாதனைகள் பட்டியல் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் நகர்க்கழக செயலாளர் நகர்மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் தொடங்கி வைத்தார். உழவர் சந்தை வியாபார பெருங்குடி மக்கள் சாலையோரக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு கழக நான்காண்டு சாதனைகளை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட செய்தித் தொடர்பாளர் கவுன்சிலர் அயூப் கான், தொகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், சுப. ஜெயகாந்தன், சுப. ஜெயக்குமார், வேங்கை பிரபாகரன், செந்தில்வேல்பாண்டி, பிடிஏ. பிரவீன், வேல்முருகன், மோகன் பிரசன்னா, கீழ்குளம் ஏஏ. சேகர், நிழல்குமார், கார்த்தி, சுப்பையா, போர்வெல் குமார், ரவிச்சந்திரன், இராமதாஸ், சிவகங்கை அரிமா சங்க நிர்வாகிகள் தலைவர் ரமேஷ் கண்ணன், மாவட்ட அமைச்சரவை விஷ்வநாதன், பாண்டி, செயலாளர் துரைப்பாண்டியன் பொருளாளர் செந்தில் குமரன், சந்திரசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் 15 வட்டக்கழக செயலாளர் தனசேகரன் சிறப்பாக செய்திருந்தார்.