மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 03.05.2024, வெள்ளிக்கிழமை, சித்திரை திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர் /செயல் அலுவலர் கலைவாணன், மதுரை உதவி ஆணையர் வளர்மதி, மேலூர் சரக ஆய்வர் ஐயம்பெருமாள், திருக்கோவில் அறங்காவலர்கள் பாண்டியராஜன்,செந்தில்குமார், மீனாட்சி, அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 98,62,978 ரொக்கமும்,மேலும் 9 கிராம் தங்கம் ,175 கிராம் வெள்ளி, ஆகியன கிடைக்கப்பெற்றன.



