கோவை, மே 02 –
கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான சி கே கண்ணன் கூறியதாவது: ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எங்கள் வின்னர்ஸ் இந்தியா குழுமங்கள் சார்பிலும், எங்கள் தந்தையின் நினைவு அறக்கட்டளை சார்பிலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களது பிரதான தொழில் ரியல் எஸ்டேட் என்பதால் அது சம்பந்தமான ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு வீட்டுமனைகளை பரிசாக தந்துள்ளோம்.
இது தவிர சிறப்பாக செயல்படும் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்த மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பெயரில் வீட்டு மனைகளை இலவசமாக கிரயம் செய்து தந்துள்ளோம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ரேக்ளா வீரர்களுக்கும் இலவச வீட்டுமனைகளை வழங்கி உள்ளோம்.
சின்னாம்பதியில் உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியை தத்து எடுத்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தக பைகள், நோட்டு புத்தகங்கள், பேனா-பென்சில் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். 50க்கும் மேற்பட்ட பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்குகள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி உள்ளோம். எல்லை மாகாளியம்மன் கோவிலில் தினமும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.
எங்கள் வின்னர்ஸ் குழுமம் சார்பில் வாளையார் அருகே தமிழக எல்லையில் உள்ள சின்னாம்பதியில் எங்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தில் 25 ஏக்கரில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வின்னர்ஸ் ஹில் ரிசார்ட்ஸ் என்ற பெயரில் புதிய கோடை வாசல் ஸ்தலத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று கூறினார்.



