கோவை, அக். 01 –
காந்திபுரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை தனது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விழாவானது கோவைப்புதூர் வி எல் பி ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரி வெளி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் 100 ம் மேற்பட்ட சமூக அறக்கட்டளைக்கு சிறந்த சேவை அமைப்பிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.. மேலும் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையும், அடுத்த 5 அறக்கட்டளைகளுக்கு தலா 10,000 நன்கொடையும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையை கோவை ஜீவ சாந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
அடுத்தடுத்த ₹10,000 காசோலைகளை பெற்றுக் கொண்ட அறக்கட்டளைகள் விபரம் பின்வருமாறு: ஸ்வதர்மா பவுண்டேஷன், ஸ்ரீ சக்தி சுற்றுச்சூழல் அமைப்பு , அன்புவனம் அறக்கட்டளை, துளிர் கல்வி அறக்கட்டளை, அருணாலயம் அறக்கட்டளை
200பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிட்டதட்ட 6.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. குறிப்பாக 20 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர், கணவனால் கைவிடப்பட்ட 16 பெண்மணிகளுக்கு தொழில் துவங்க தையல் மிஷின் உள்ளிட்ட தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மலைவாழ் மாணவர்கள் 5 பேர் உட்பட தாய் தந்தை இருவரையும் இழந்து பள்ளி கல்லூரி பயிலும் மாணவ மாணவிகள் 15 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 70 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது. மிகவும் எளிமையான 75 குடும்பங்களுக்கு சேலை, அரிசி, மளிகை பொருள் போன்ற பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் முனைவர் மா.முருகன் இதுவரை அறக்கட்டளை செய்த அத்தனை நலத்திட்ட உதவிகள் உட்பட தற்போது நடைபெற்ற இந்த பிரம்மாண்டம் நலத்திட்ட உதவி விழா வரை அனைத்து சமூகப் பணிகளுக்கும் அணி நண்பர்களே உறுதுணையாக இருந்ததாக தகவல் தெரிவித்தார். மேலும் சன் ஸ்மார்ட் சரவணன், அருணாலயம் அருணா, திரைத்துறையினர் மற்றும் இதர நலன் விரும்பிகளின் பங்களிப்பு எப்போதும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் முன்னேற்றத்திற்கு கரம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சன் ஸ்மார்ட் குடும்ப தலைவர் சரவணன், அருணாலயம் அறக்கட்டளை நிறுவனர் அருணா, முத்துக்குமார், வி எல் பி கல்லூரி பிருந்தா, கலைவாணி, யுனைடெட் கல்லூரி விஜயா, நட்சத்திர விருந்தினராக நடிகைகள் பிரணிகா, ஷாலினி, பவித்ரா லட்சுமி, RJ ஆனந்தி, சூப்பர் சிங்கர் ரிகானா, ஆதனா ஸ்ரீ, விஜய் டிவி அருண், அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்..



