கோவை, மே 15 –
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் (வடக்கு 48 / தெற்கு 21) மூடப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள இயங்கும் கடைகளுக்கு கூடுதல் பணிப்பளு உயர்ந்துள்ளது.
கீழ்கண்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். கடை ஊழியர்களுக்கு தொடர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய மூடப்பட்ட பணியாளர்களுக்கு தமிழக அரசின் இதர அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரந்தரமாக பணியமர்த்திட வேண்டுகிறோம். 500 மீட்டர் என்ற விதிமுறைக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடியது போல எஃப் எல் 2 தனியார் மனமகிழ் மன்றங்களையும் இழுத்து மூடிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
இயங்கிவரும் கடைகளுக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்கப்பட வேண்டும். உடைகின்ற பாட்டில்களுக்கு, காலி பாட்டில்களை திரும்ப பெற ஒப்பந்ததாரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் 100% மின் கட்டணத்தை வழங்கிட வேண்டும். கடைகளுக்கு சரக்கு இறக்கித்தர நிர்வாகமே இறக்கு கூலி வழங்க வேண்டும்.



