மார்த்தாண்டம், ஆக. 8 –
கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணைசேர்ந்த 120 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காலை உணவு திட்டம் இல்லை.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்ததில் 5 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களுக்கு தலை சுற்றுதல் வந்ததாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சியான பள்ளி நிர்வாகிகள் உடனடியாக ஐந்து மாணவர்களை மீட்டு ஆட்டோவில் சூழல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மாணவர்கள் நலமுடன் வீடு திரும்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் பள்ளி சென்று தலைமையாசிரியரிடம் விசாரித்தனர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவர் பள்ளிக்கு இரண்டு கவர்களில் இனிப்பு கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு கவரில் இருந்த இனிப்பை நண்பர்களுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டு உள்ளார். இதையடுத்து சற்று நேரத்தில் ஐந்து மாணவர்களும் வாந்தி எடுத்து தலை சுற்றியதாக தெரிவித்தனர்.
கொண்டு வந்த இனிப்பு பேக்கரியில் வாங்கப்பட்டதா? வாந்திக்கு காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் உணவு பாதுகாப்புத் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மிட்டாய் கடைக்கு சென்று ஆய்வக சோதனைக்காக ஒரே சாக்லேட்டின் ஒரு மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் ஒருமுறை பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.