களியக்காவிளை, பிப். 18 –
குழித்துறையில் பைக் திருடிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஶ்ரீ விசாரம், நளின விகார் வீட்டை சார்ந்த ராமச்சந்திரன் மகன் பிரமோத் சந்திரன் (35). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அத்துடன் இரவு நேரங்களில் திருட்டு தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த வாரம் குழித்துறையில் ஒரு வீட்டில் இருந்து பைக் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் திருடனை தேடி வந்துள்ளனர். திருடனை கைது செய்த போலீசார் பைக் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



