தென்காசி, செப். 24 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஹரி பிரியாணி நிறுவனர் ஹரிஹர செல்வன் மற்றும் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் லூர்து நாடார் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது பத்திரிகையாளர் சந்திப்பில் ஹரி பிரியாணி நிறுவனர் ஹரிஹர செல்வன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் மூன்று ஆம்புலன்ஸ் சேவையை வருகின்ற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தெரிவித்தார். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை இல்லாமல் கஷ்டப்படுவதால் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவையை துவங்க இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் லூர்து நாடார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: காமராஜர் புகழ் குறித்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது கிடையாது. வரக்கூடிய பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தில் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த வேண்டும். மேலும் காமராஜர் நினைவிடத்தில் இருக்கும் காமராஜரின் மார்பளவு சிலையை நீக்கிவிட்டு தமிழக அரசின் சார்பில் முழு திருவுருவச் சிலையை நிறுவ வேண்டும்.
தமிழர்களாக எங்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி தனி தமிழ்நாடு பெற்று தந்தவர் மபொசி. அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ராஜ கோபுரத்தை கட்டிக் கொடுத்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சிவந்தி ஆதித்தனார் பெயரை தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கும் புதிதாக கட்டி விரைவில் திறக்க இருக்கும் தென்காசி தினசரி சந்தை காய்கறி மார்க்கெட்டுக்கும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு தலைவர் லூர்து நாடார் தெரிவித்தார்.



