நாகர்கோவில், அக் : 15,
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கின்கால் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி சிறப்பு பூஜை செய்தார்.
காப்பகத்தில் தங்கியுள்ள 31 குழந்தைகளுடன் அமர்ந்து பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளின் தங்குமிடம், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து, குழந்தைகளை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், காப்பகப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். நவராத்திரி விழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுகிறது.



